ஏமாற்றி நடிக்க வைத்த ஹரி.. அதிர்ச்சி புகார் சொன்ன சிங்கம் பட நடிகை
சிங்கம் படம் சூர்யா மற்றும் ஹரி கெரியரில் மிக முக்கிய படமாகும். சிங்கம் முதல் பாகம் தற்போதும் அதிகம் ரசிகர்களை கவர்ந்த படமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் அந்த படத்தில் விலைமாதுவாக நெகடிவ் ரோலில் நடித்து இருந்தார் மெட்டி ஒலி புகழ் வனஜா. சீரியல்களில் ஹோம்லியாக நடித்த அவரா இப்படிப் பட்ட ரோலில் நடிப்பது என அனைவரும் ஷாக் ஆனார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் வனஜா அளித்த பேட்டியில் தன்னை ஏமாற்றி சிங்கம் படத்தில் நடிக்க வைத்துவிட்டார்கள் என தெரிவித்து இருக்கிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை பான் மசாலா போட சொல்ல இருக்கிறார்கள், ஏன் என கேட்ட போது தான் அவருக்கு தனது ரோல் என்ன என்கிற உண்மை தெரிய வந்திருக்கிறது. வனஜாவின் கணவர் (அப்போது திருமணம் ஆகவில்லை) தான் அந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
அவர் தான் இந்த ரோலில் நடிக்க சொல்லி இருக்கிறார். அதனால் அவருடன் வனஜா சண்டை போட்டிருக்கிறார். வனஜாவின் அப்பாவும் அந்த நேரத்தில் சமாதானப்படுத்தி, ஹரி சாருக்காக அதில் நடி என கூறி நடிக்க வைத்து இருக்கிறார்.
அதனால் விருப்பமே இல்லாமல் கடும் கோபத்தில் தான் சிங்கம் படத்தில் நடித்தேன் என வனஜா தற்போது அளித்திருக்கும் பேட்டியில் கூறி இருக்கிறார்.

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
