நடிகர் எம்.ஜி.ஆர் இறப்பதற்கு முன் கடைசியாக பார்த்த திரைப்படம்.. யார் நடித்த படம் தெரியுமா

death bharathiraja mgr sathyaraj M.G. Ramachandran last watched movie vedham puthithu
By Kathick Jan 05, 2022 01:40 PM GMT
Report

தமிழ் திரையுலகத்திற்கு நடிகராகவும், தமிழ் நாட்டிற்கு முதலமைச்சராகவும் வாழ்ந்தவர் எம்.ஜி. ராமசந்திரன் அவர்கள்.

புரட்சி தலைவர் என ரசிகர்களாலும், தொண்டர்களாழும் செல்லமாக அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் தீவீர ரசிகராக இருப்பவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவருடைய நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான திரைப்படம் வேதம் புதிது.

ஜாதி பிரச்சனையை பற்றி பேசிய இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்தது. படத்தைப் பார்த்த மத்திய தணிக்கைக் குழுவினர், படத்தை வெளியிட முடியாது என்று கூறிவிட்டார்கள். இதனால், மொத்த படக்குழுவும் திக்குமுக்காடி போனார்கள்.

ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் இயக்குனர் பாரதிராஜாவிடம் போன் காலில் பேசி, 'உங்களுடைய படத்துக்கு ஏதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டேன்’ என்று விசாரித்து, படத்தைப் பார்க்க வேண்டும். உடனே ஏற்பாடு செய்யுங்கள்’ என கூறியுள்ளார்.

இதன்பின் எம்.ஜி.ஆர் படத்தை பார்க்க பாரதிராஜா மற்றும் சத்யராஜ் ஏற்பாடு செய்துள்ளனர். படத்தை பார்த்துவிட்டு, சத்யராஜின் கையை முத்தமிட்டு பாராட்டிய எம்.ஜி.ஆர், பாரதிராஜாவிடம், 'ரிலீஸ் தேதியை நீ அறிவித்து விடு, படம் ரிலீஸாகும்' என கூறிவிட்டு சென்றார்.

அதன்பின், 1987 டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர் தமிழக மக்களை விட்டு பிரிந்தார். இதனால், எம்.ஜி.ஆர் கடைசியாக பார்த்த படம் வேதம் புதிது என்று கூறப்படுகிறது. அவர் மறைந்தாலும், அவர் கொடுத்த வாக்குப்படி டிசம்பர் 27-ல் வேதம்புதிது படம் ரிலீஸானது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US