புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான சிறந்த திரைப்படங்கள், ஒரு பார்வை..
தமிழ் சினிமாவின் வெவ்வேறு காலங்களில் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இருந்துள்ளனர். அந்த வகையில் இன்றளவும் மக்களால் மறக்க முடியாத ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் எம்.ஜி.ஆர். இவரின் திரைப்படங்களை காலங்கள் கடந்தும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சினிமாவை ஆட்டிப்படைத்து வந்த எம்.ஜி.ஆர் பின் அரசியலிலும் இறங்கி அங்கும் கொண்டிக்கட்டி பறந்தார். அப்படியான சிறப்புகளை பெற்ற எம்.ஜி.ஆர்-ன் சிறந்த திரைப்படங்கள் குறித்த பட்டியலை தான் தற்போது பார்க்கவுள்ளோம்.
அடிமை பெண்
எம்.ஜி.ஆர்-ன் அடிமை பெண் திரைப்படம் 1969 ஆம் ஆண்டு வெளியானது, நடிகர் எம்.ஜி.ஆர் தயாரித்த இப்படத்தில் ஜெயலலிதாவும் அவரும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தனர். மிகவும் கதாபாத்திரங்களுடன் இரட்டை வேடத்தில் அசதிய எம்.ஜி.ஆர்-ன் அடிமை பெண் திரைப்படம் அப்போதே பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. மேலும் இப்படத்தில் தான் உலகிலே முதன்முறையாக இரண்டு முதல்வர்கள் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் சுற்றும் வாலிபன்
எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கிய இப்படத்தில் நடிகை மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர். பெரிய வெற்றியடைந்த இப்படத்தை அப்போதே எம்.ஜி.ஆர் பெரிய பட்ஜெட்டில் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசியல் ரீதியாக இப்படம் எதிர்ப்புகளை சந்தித்தது.
அதன்படி அப்போது திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பிரதானமாக சுவரொட்டிகளை மட்டுமே நம்பியிருந்த காலத்தில் சுவரொட்டிகளின் மீதான வரியை தமிழக அரசு ஏற்றியது. நிதி நெருக்கடி காரணமாக சுவரொட்டிகள் விளம்பரத்தினை எம்.ஜி.ஆர் தவிர்த்தார். ஆனாலும் கூட அப்படம் மக்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்துள்ளது.
குடியிருந்த கோயில்
எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1968 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் குடியிருந்த கோயில், இப்படத்திலும் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஜெயலலிதா, எல்.விஜயலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனைவரின் ஆதரவை பெற்று பெரிய வெற்றியடைந்த இப்படம் எம்.ஜி.ஆர்-ன் சிறந்த திரைப்படங்களில் ஒன்று. மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அப்போது பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
நம் நாடு
எம்.ஜி.ஆர் நடிப்பில் இயக்குனர் C.P.ஜம்புலிங்கம் இயக்கத்தில் கடந்த 1969 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நம் நாடு. இப்படத்திலும் எம்.ஜி.ஆர் உடன் ஜெயலலிதா தான் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இப்படம் தெலுங்கில் வெளியான Kathanayakudu படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகும் போது தான் எம்.ஜி.ஆர் கட்சி புதிய ஒன்றை தொடங்கயிருந்தார். அதனால் ஒரிஜினல் தெலுங்கு படம் இல்லாமல் நம் நாடு படத்தில் அதிகமாக அரசியல் குறித்த வசனங்கள் இருந்ததாம். படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
எங்க வீடு பிள்ளை
எம்.ஜி.ஆர் நடிப்பில் சாணக்யா இயக்கத்தில் கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எங்க வீடு பிள்ளை. எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் அசத்திய இப்படத்தில் அவருடன் சரோஜா தேவி, தங்க வேலு, நம்பியார், நாகேஷ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். பெரிய வெற்றியடைந்த இப்படத்தில் இடம் பெற்ற நான் ஆணையிட்டால் என்ற பாடலை யாராலும் மறந்துவிட முடியாது.
திடீரென தலைவர் 169 டேக்-யை நீக்கிய இயக்குனர் நெல்சன் ! அதிர்ச்சியில் திரையுலகம்..