முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய நடிகை மியா ஜார்ஜ்.. அழகிய குடும்பம்
ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பில் வெளியான அமர காவியம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ்.
இப்படத்திற்கு பிறகு, இன்று நேற்று நாளை, வெற்றிவேல், எமன் உள்ளிட்ட படங்களில் நடித்து சில காலம் தமிழ் திரையுலகில் நடிகையாக வளம் வந்தார்.
ஆனால், எமன் படத்திற்கு பிறகு நடிகை மியா ஜார்ஜுக்கு, பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழில் கிடைக்கவில்லை.
ஆனால், மலையாள திரையுலகில் சிறந்த நடிகையாக விளங்கி, பல திரைப்படங்கள் நடித்து வருகிறார் நடிகை மியா ஜார்ஜ்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடிகை மியா ஜார்ஜுக்கு, அஸ்வின் என்பருடன் திருமணம் நடந்தது. இந்த காதல் தம்பதிக்கு தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் நடிகை மியா ஜார்ஜ் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
