ஆக்ஷன் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்.. வெளிவந்த புகைப்படங்கள்
நடிகர் மோகன்
மூடுபனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் மோகன்.
1980-களில் நடிப்பை துவங்கிய இவர், நெஞ்சத்தை கிள்ளாததே, மௌன ராகம், உதயகீதம் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
பெரும்பாலும் தமிழில் இவர் மைக் பிடித்து பாடல் பாடும் பாடகர் கதாபாத்திரத்தில் ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதனாலேயே அவர் மைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் வெள்ளி விழாவை கொண்டாடியுள்ளாதால், இவரை வெள்ளி விழா நாயகன் என்றும் அழைப்பார்கள்.
இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுத்திருக்கும் மோகன், ஹரா எனும் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார்.
ஆக்ஷன் ஹீரோவாக என்ட்ரி
இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படம்பிடிக்கப்பட்டது. முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ..