மைக்கேல் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
மைக்கேல்
உலக புகழ்பெற்ற பிரபலங்களில் ஒருவர் மைக்கேல் ஜாக்சன். நடனம் என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது இவருடைய நடனமும், பாடல்களும்தான். அதுவும், இவருடைய மூன் வாக் எல்லாம் வேற லெவலில் இருக்கும்.

இவரை பார்த்துதான் நடனமாட வேண்டும் என்ற கனவு பலருக்கும் வரும். இப்படி பல கோடி மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம்தான் 'மைக்கேல்'. Antoine Fuqua இப்படத்தை இயக்க மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்திருந்தார்.
அச்சு அசல் அப்படியே மைக்கேல் ஜாக்சன் போலவே நடித்து, நடனமாடி அனைவரின் கவனத்தையும் இவர் ஈர்த்துள்ளார். நேற்று வெளிவந்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வசூல்
இந்த நிலையில், மைக்கேல் திரைப்படத்தின் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரிமியர் மற்றும் முதல் நாள் மட்டுமே இப்படம் ரூ. 900 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

You May Like This Video
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri