இதுவரை உலகளவில் மைக்கேல் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
மைக்கேல்
ஹாலிவுட் திரையுலகில் இருந்து கடந்த மாதம் வெளிவந்து உலகளவில் பட்டையை கிளப்பி வரும் திரைப்படம் மைக்கேல் ஜாக்சன்.

நடனத்தின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் Antoine Fuqua இயக்கியுள்ள திரைப்படம்தான் 'மைக்கேல்'. இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்துள்ளார்.
வசூல்
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி தீர்த்தனர். ஒவ்வொரு திரையரங்கமும் மைக்கேல் ஜாக்சனின் பாடல் மற்றும் நடத்தின் மூலம் கச்சேரியாக மாறியது.

இந்த நிலையில், மைக்கேல் திரைப்படத்தின் இதவுரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 6,812 கோடி வசூல் செய்துள்ளது.