மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்ற அறந்தாங்கி நிஷா- ஆனால் ஏற்பட்ட சோகம், உதவி செய்யுங்கள்
மிக்ஜாம் புயல்
சென்னையை மிக்ஜாம் புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுவிட்டது. அங்கு உள்ள மக்கள் அனைவரும் சாப்பாடு, தூக்கம், கரண்ட், வீடு என இல்லாமல் கிடைக்கும் பாதுகாப்பான இடங்களில் வசித்து வருகிறார்கள்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்கள்.
பல இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது, எப்போது பழைய நிலைமைக்கு திரும்புவோம் என மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அறந்தாங்கி நிஷா
இந்த நிலையில் பிரபல நடிகை அறந்தாங்கி நிஷா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், சென்னை மக்களுக்கு உதவ எனது காரில் இடம் இருந்த அளவிற்கு பொருளை வைத்துள்ளேன். சென்னை செல்ல வண்டிகளை கேட்டால் யாரும் உதவ முன் வரவில்லை.
தயவுசெய்து உதவுங்கள், அங்கு பலரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என சோகமான விஷயத்தை கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
