மகாநதி சீரியல் நடிகர் நாயகனாக நடிக்கும் மிடிஸ் கிளாஸ் மாறன்... புத்தம் புதிய சீரியல் புரொமோ
மகாநதி
4 சகோதரிகளின் வாழ்க்கை கதையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சீரியல் தான் மகாநதி.
இந்த சீரியலில் நிவின் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் கவனம் பெற்றவர் தான் நடிகர் ருத்ரன் பிரவீன். முதலில் இவரது கதாபாத்திரம் தான் ஹீரோ ரேஞ்சிற்கு கொண்டு செல்லப்பட்டது, பின் திடீரென விஜய் என்ற கதாபாத்திரம் அறிமுகமாக அப்படியே கதை மாறியது.

ஆனாலும் ருத்ரன் நடித்த நிவின் கதாபாத்திரத்திற்கும் நல்ல ஸ்கோப் இருந்தது. ரசிகர்களின் பேராதரவில் வெற்றிகரமாக ஒளிபரப்பான மகாநதி சீரியல் தற்போது முடிந்துவிட்டது. அதில் நடித்தவர்கள் அடுத்தடுத்த பிராஜக்ட் கமிட்டாகிவிட்டார்கள்.
புதிய சீரியல்
லட்சுமி ப்ரியா பிக்பாஸ், சுவாமிநாதன் தெலுங்கு சீரியல் என பிஸியாக ருத்ரன் பிரவீனும் புதிய சீரியல் கமிட்டாகியுள்ளார். மிடில் கிளாஸ் மாறன் என்ற சீரியலின் ருத்ரன் நாயகனாக நடிக்கிறார்.

வரும் டிசம்பர் 21ம் தேதி முதல் ஒளிபரப்பாகப்போகும் இந்த சீரியலின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் கல்யாண மேடை ஷோவில் நாயகன் மாறனுக்கு பெண் பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதோ மிடில் கிளாஸ் மாறன் சீரியலின் முதல் புரொமோ,