மிடில் க்ளாஸ் திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக மிடில் க்ளாஸ் வாழ்க்கை குறித்து பல படங்கள் திரைக்கு வந்துக்கொண்டு இருக்கிறது, அந்த வகையில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் கிஷோர் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த மில்ட் க்ளாஸ் எப்படியுள்ளது பார்ப்போம்.

கதைக்களம்
முனிஷ்காந்த், விஜயலட்சுமி அன்றாட வாழ்க்கையையே மாசம் 15 ஆயிரம் சம்பளத்தில் வாழ்ந்து வருபவர்கள். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறிவிட வேண்டும் என்று போராடி பல வேலைகள் பார்த்து வருகின்றனர்.
அந்த சமயத்தில் விஜயலட்சுமி தம்பி திருமணம் வர, எப்படியாவது நிறைய மொய் செய்ய வேண்டும் என்று சொல்ல முனிஷ்காந்த் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்.

அந்த நேரத்தில் முனிஷ்காந்த் அப்பா ஒரு சேட்டுக்கு சென்னையில் இருக்கும் கடை ஒன்றை இலவசமாக கொடுக்கிறார், கிட்டத்தட்ட பல வருடம் கழித்து அந்த சேட்டு தன் முதலாளி மகன் முனிஷ்காந்த் என்பதால் ஒரு கோடிக்கு செக் போட்டு கொடுக்கிறார்.
ஆனால், கொடுத்த செக்கை வாங்கிக்கொண்டு முனிஷ்காந்த் வரும் வழியில் ஒரு விபத்தில் அந்த செக்-யை தொகைக்க அதன்பின் என்ன ஆனது என்ற எமோஷ்னல் போராட்டமே இந்த மிடில் க்ளாஸ்.

படத்தை பற்றிய அலசல்
முனிஷ்காந்த், விஜயலட்சுமி இருவரும் கேரக்டர்களாகவே வாழ்ந்துள்ளனர். முனிஷ்காந்த் பொறுமை, விஜயலட்சுமி கோபம் என இரண்டு பேர் குணாதிசயம் அவர்கள் கதபாத்திரங்களாக உருவாக்கியது சூப்பர்.
அதோடு முனிஷ்காந்த் நண்பர்களாக வரும் குரேஷி, கோடாங்கி புகழ் வடிவேலு ஆகியோர் சிறப்பாக தங்கள் கதாபாத்திரங்களை செய்துள்ளனர்.

அதிலும் கோடாங்கி அவர்களின் ஒவ்வொரு கவுண்டருக்கும் விசில் பறக்கிறது, கூடிய விரைவில் பெரிய காமெடி நடிகராக எதிர்ப்பார்க்கலாம். படத்தின் முதல் பாதி விஜயலட்சுமி தம்பி திருமணத்திற்கு பண ஏற்பாடு செய்வது, அதனால் வரும் மோதல் சண்டை என அனைத்தையுமே கலகலப்பாகவே கொண்டு சென்றுள்ளனர்.
இரண்டாம் பாதி செக் தொலைந்ததும் மிகவும் எமோஷ்னல் சைட் சென்றாலும் ஆங்காங்கே காமெடி காட்சிகளை வைத்தது ரசிக்க வைக்கின்றது.
அதே நேரத்தில் அந்த செக் தொலைந்த பிறகு அதை மீட்க இவர்கள் செய்யும் வேலைகள் மிடில் க்ளாஸ் தாண்டி சூப்பர் ஹீரோக்கள் போல் இவர்கள் செயல்படுவது கொஞ்சம் யதார்த்த மீறல்.

எல்லோரும் சொல்வது போல் இதெல்லாம் படத்தில் தான் சாத்தியம் என்பது போல் மிடில் க்ளாஸ் என்று டைட்டிலில் கொஞ்சம் யதார்த்தத்தை மீறி சினிமாத்தன்மைகாக பல காட்சிகள் உள்ளது, இன்னமும் அழுத்தமான காட்சிகளும் இரண்டாம் பாதி இருந்திருக்கலாம்.
டெக்னிக்கலாக ஒளிப்பதிவு சூப்பர், பாடல்கள் இன்னும் கேட்சி-ஆக வந்திருக்கலாம்.
க்ளாப்ஸ்
முனிஷ்காந்த், விஜயலட்சுமி மற்றும் மற்ற நடிகர்கள் பங்களிப்பு.
படத்தின் முதல் பாதி.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி இதுதான் நடக்க போகிறது என்று தெரிந்துவிடுகிறது,
ஆனாலும் டுவிஸ்ட் வைக்கிறேன் என சென்ற காட்சிகள்.
மொத்தத்தில் மிடில் க்ளாஸ் சில குறைகள் இருந்தாலும் பெருப்பான்மை குடும்பங்கள் பிரச்சனையை பேசியதற்காகவே ஒரு விசிட் அடிக்கலாம்.
