விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறாரா மைக் மோகன்.. வெளிவந்த உண்மை தகவல்
தளபதி 66
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா மற்றும் சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும், இப்படத்தில் விஜய்க்கு இரு அண்ணன்கள் இருப்பதாகவும், அந்த இரு கதாபாத்திரத்தில் 90ஸ் எவர் க்ரீன் ஹீரோக்களை நடிக்க வைப்பதாகவும் தகவல் வெளியானது.
விஜய்க்கு அண்ணனாக மோகன்?
அதன்படி, பிரகாஷ் ராஜ் ஒரு அண்ணனாகவும், மைக் மோகன் மற்றொரு அண்ணனாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது இப்படத்தில் மோகன் நடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனை அவரே கூறியுள்ளாராம். மேலும், ஹரா படத்தில் நடித்து முடித்த பிறகு, அடுத்த படத்தில் நடிப்பது குறித்து யோசிப்பேன் என்றும் கூறியுள்ளாராம் மோகன்.
இதுமட்மின்றி தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிக்க மோகன் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.