தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள உத்தரவு.. என்ன தெரியுமா?
நடிகர் விஜய்
நடிகர் விஜய், தற்போது தனது 69வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்திற்கு ஜன நாயகன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.
விஜய்யுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர், அனிருத் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்க வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.
உத்தரவு
தற்போது தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு 3Y பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Y பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்களாம், விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படுமாம்.