பெண்ணாக மாறி குத்தாட்டம் போட்ட மிர்ச்சி செந்தில்: நாம் இருவர் நமக்கு இருவரில் அட்ராசிட்டி
நடிகர் செந்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் டபுள் ரோலில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கு நாளல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது செந்தில் பெண் வேஷம் போட்டு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
செந்தில் பெண் போல சுடிதார் போட்டுகொண்டு டான்ஸ் ஆடி இருக்கிறார். மாறன் போனை எடுத்து இப்படி வீடியோ ரெக்கார்ட் செய்து கொண்டிருக்கிறார் மாயன். இந்த வீடியோவால் என்ன பிரச்சனை வருமோ? வீடியோ இதோ..
ஏதோ பெருசா plan பண்ணிடாப்ல.. ?
— Vijay Television (@vijaytelevision) January 20, 2022
நாம் இருவர் நமக்கு இருவர் - இன்று மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NINI #VijayTelevision pic.twitter.com/WyC7vnZY7O
நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் கத்தி என்கிற ரோலில் நடித்துவந்த ராஜு தற்போது பிக் பாஸ் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்து இருக்கிறார். தற்போது ஷோ முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் அவர் விரைவில் நாம் இருவர் சீரியலில் நடிக்க தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தி கதாபாத்திரம் வெளிநாட்டுக்கு சென்று எதோ வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றுவிட்டது போல ஷோவில் காட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.