8 வருடம் கழித்து பிறந்த குழந்தை.. முதல் முறையாக மகன் போட்டோவை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்
பிரபல RJவாக இருந்து அதன் பின் நடிகர் ஆனவர் மிர்ச்சி செந்தில். அவர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை போன்ற தொடர்களில் நடித்து பிரபலம் ஆனார். மேலும் அவர் ஹீரோவாக படத்திலும் நடித்து இருக்கிறார்.
தற்போது செந்தில் ஜீ தமிழ் டிவியில் அண்ணா என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கிய அந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குழந்தை
செந்தில் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஜாவுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் கழித்து தான் குழந்தை பிறந்தது. கடந்த ஜனவரி 4ம் தேதி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது மகனுக்கு 6 மாதங்கள் ஆகி இருக்கும் நிலையில் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை மிர்ச்சி செந்தில் வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
You May Like This


திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
