சின்னத்திரையின் முன்னணி நடிகர் மிர்ச்சி செந்திலின் மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க
மிர்ச்சி செந்தில்
சின்னத்திரையில் கலக்கி வரும் முன்னணி பிரபலங்களில் ஒருவர் மிர்ச்சி செந்தில். இவர் ஆண்டாள் அழகர் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தான் மக்கள் மனதில் ஹீரோவாக இடம்பிடித்தார். இன்று வரை இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியல் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது.
இதன்பின் மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஜீ குடும்ப விருது விழாவில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. நடிகர் மிர்ச்சி செந்தில் தன்னுடைய சரவணன் மீனாட்சி சீரியலில் இணைந்து நடித்த நடிகை ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
மிர்ச்சி செந்திலின் மகனா இது
இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையும் உள்ளார். இந்நிலையில், தீபாவளி வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை மிர்ச்சி செந்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், செந்தில் - ஸ்ரீஜா மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
