புதிய தொழிலை தொடங்கியுள்ள சீரியல் பிரபலங்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா.. எங்கே தெரியுமா?
செந்தில்-ஸ்ரீஜா
வானொலியில் இளையராஜா பாடல்களை வைத்து ஒரு அழகிய ஷோ நடத்தி அதன்மூலம் மிகவும் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.
முதன்முதலில் இயக்குனர் சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்தார், அதன்பிறகு தொடர்ந்து படங்கள் நடித்தாலும் பெரிய ரீச் இல்லை.
அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி தொடரில் நடித்து ஆடியன்ஸ் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் ஆனார்.
இந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவையே காதலித்து திருமணமும் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
தற்போது செந்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடரில் நடித்து வருகிறார்.

புதிய தொழில்
தற்போது புதிய தொழில் தொடங்கியுள்ள செந்தில் இதுகுறித்து ஒரு பேட்டியில், திருவல்லாவில் ஒரு கஃபே விலைக்கு வந்தது, முன்னாடி நடத்தியவர்களால் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

ஸ்ரீஜா அதை வாங்கிப் பண்ணலாம்னு சொன்னதும் நானும் ஓகே சொல்லிட்டேன். ஆனா கொஞ்சம் வேலையா தெரியுது, படப்பிடிப்பு முடிஞ்சதும் வீடு என இருந்தவன் இப்போது கேரளா சென்று கஃபே வேலைகளை பார்க்க வேண்டியதாக உள்ளது.
மற்றபடி நிர்வாகம் அனைத்தையும் ஸ்ரீஜா தான் பார்த்துக் கொள்கிறார்கள் என கூறியுள்ளார்.

திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri