உலக அழகியுடன் இணையும் அஜித்.. வேற லெவல் ஜோடி
ஏகே 62
அஜித் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் துணிவு. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏகே 62 படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தை லைகா தயாரிக்கிறது. அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது.

ஆனால், இதுவரை இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
முதலில் நயன்தாரா என்று கூறப்பட்டது, பின் திரிஷா என தெரிவித்தனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக யார் இப்படத்தின் கதாநாயகி என்று கூறவில்லை.
வேற லெவல் ஜோடி
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராய் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது உறுதியாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் தில் ராஜு மீது கடுப்பில் இருக்கும் விஜய்.. இதுதான் காரணமா