விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன்... பிரபல நடிகர் வருத்தம்
மாஸ்டர் படம்
பிகில் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்த திரைப்படம் தான் மாஸ்டர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிக்க அனிருத் இசையமைப்பில் வெளியாகி இருந்தது.
விஜய்யின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன் என ஒரு பிரபலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர்
நான் விஜய் அவர்களின் தீவிர ரசிகன். அவர் நடித்த மாஸ்டர் படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த வேடத்தில் நான் தான் நடிக்க வேண்டியது. ஆனால் அப்போது வேறொரு படத்தில் கமிட் ஆகியிருந்ததால் அதை மிஸ் பண்ணிட்டேன்.
இப்போது விஜய் CM ஆகிட்டாரு, இனிமேல் அவருடன் நடிக்கவே முடியாதே என இப்போதும் மிகவும் வருத்தமாக உள்ளது என ஒரு பேட்டியில் மலையாள சினிமா நடிகர் ஆண்டனி வர்கீஸ் கூறியுள்ளார்.
