Mission: Impossible – The Final Reckoning திரை விமர்சனம்
ஜேம்ஸ் பாண்ட் என்ற ஒரு ப்ராண்ட் உலகம் முழுவதும் செம ரீச் ஆக , டாம் க்ரூஸ் தனக்கென ஒரு ப்ராண்ட் கிரியேட் செய்ய வேண்டும் என மிஷன் இம்பாசிபிள் என்ற ஒரு சீரிஸை தொடங்கினார்.
பல வருடமாக இதில் ஹிட் கொடுத்து வந்த டாம், அதன் கடைசி பாகத்தை இன்று தந்துள்ளார், இந்த கடைசி பாகம் மக்களை எவ்வாறு மகிழ்வித்தது, என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
கடைசி பாகத்தை இரண்டு பார்ட் ஆக பிரித்து டாம் குரூஸ் கொடுத்துள்ளார், இதில் கடந்த பாகத்தில் உலகமே ஒரு AI கண்ட்ரோலுக்கு வருகிறது, அதன் பெயர் NTTA. கடைசி பாகமாக The Final Reckoning-ல் அந்த AI உலகத்தில் உள்ள மக்களிடம் ஒரு கிளர்ச்சியை உண்டு செய்கிறது.
அதன் மூலம் உலக நாடுகளுக்குள் சண்டையை உண்டு செய்து அவர்களை அனு ஆயுத போருக்கு கொண்டு வர முடிவு செய்கிறது. இதன் மூலம் உலகமே அழியும், இதிலிருந்து தப்பிக்கும் மக்களை வைத்து புதிய உலகை உருவாக்க அந்த AI முடிவு செய்கிறது.
இதை தடுக்க சில வருடங்கள் முன்பு அழிந்து போன ஒரு நீர்மூழ்கி கப்பலில் உள்ள ஒரு டிவைஸை எடுத்து அதை வேறு ஒரு டிவைஸ்-உடன் இணைத்து, அந்த AI-யை ஒரு 5டி டெக்னாலஜி உள்ள ஒரு ட்ரைவ்-ல் கொண்டு வந்து கண் இமைக்கும் நேரத்தில் அந்த ட்ரைவ்-யை எடுக்க வேண்டும் என்ற செய்யவே முடியாத ஒரு மிஷனை கையில் எடுத்து எப்படி இதை ஹண்ட் முடிக்கிறார் என்பதன் உச்சக்கட்ட பரபரப்பே இந்த மிஷன் இம்பாசிபிள் தி பைனல் ரெக்னிங்.
படத்தை பற்றிய அலசல்
ஈதன் ஹண்ட்-ஆக டாம் க்ரூஸ் நீங்கள் என்ன சவால் வேண்டுமானாலும் கொடுங்கள் என் உயிரை கொடுத்து, என் டீம்-உடன் இணைந்து அதை முறியடிப்பேன் என நீர்,நிலம், ஆகாயம் என அனைத்து இடங்களிலும் தூள் கிளப்புகிறார்.
எதோ ஒரு மிஷன் அதை முடித்தால் போதும் என்றில்லாமல், இந்த AI உருவாக காரணமே மிஷன் இம்பாசிபிள் முதல் பாகத்தில் ஈதன் அவருக்கே தெரியாமல் செய்த ஒருவேலை தான் என்பதை இந்த பாகத்தில் கனேக்ட் பண்ண விதமெல்லாம் பட்டாசான திரைக்கதை.
முந்தைய பாகத்தில் வந்த ஒரு Tech Guy-ஒருவர் இந்த பாகத்தில் ஈதனுக்கு உதவி செய்யும்படி காட்டியது. அதோடு ஈதன் கேர்ள் ப்ரண்ட் ஆக வருபவர், எதோ சாதாரண பிக் பாக்கெட் என்று நம் நினைக்கும் தருணத்தில், மற்ற பிக்பாக்கெட் அடிப்பவரை விட உன் டைமிங் சிறந்தது என காட்டி இந்த உலகத்தையே அவர் தான் காப்பாற்றுகிறார் என காட்டியது எல்லாம் வேறலெவல்.
மிஷன் இம்பாசிபிள் என்றாலே ஒரு சாமனிய ரசிகன் என்ன எதிர்ப்பார்ப்பான், ஸ்டெண்ட் தான், அது இந்த கடைசி பாகத்தில் ஆரம்பத்தில் என்ன இது பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என தோன்றும், ஆனால், அவை அனைத்தும் கதைக்கு தேவை.
ஒன்ஸ் ஈதன் தனக்கான மிஷன்-ல் இறங்கியதும் ஆழ்கடலில் அவர் ஒரு டிவைஸ்-யை எடுக்க செல்லும் காட்சிகள், அந்த நீருக்குள் மூழ்கி அவர் கஷ்டப்படுவது திரையில் பார்க்கும் நமக்கே மூச்சு அடைக்கிறது.
அதோடு கேப்ரியல் என்ற கதாபாத்திரத்தை கிளைமேக்ஸில் துரத்தி செல்லும் ஹெலிகாப்டர் ஸ்டெண்ட் அந்த காற்றின் வேகம் நம் முகச்சதயை ஆட வைக்கிறது, ஆக்ஷன் விரும்பிகளுக்கு ஆடு அடித்து படையில் வைத்தது போல் உள்ளது.
டெக்னிக்கல் டீம் பற்றி சொல்ல வேண்டுமென்றால் படமே அட்வான்ஸ் டெக்னாலஜி பற்றி தானே, அப்றம் என்ன கேமரா, ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் அடி தூள் தான்.
க்ளாப்ஸ்
டாம் குரூஸ் தனி மனிதனாக பின்னி பெடல். வில்லன் என்றாலே கொடூரமானவன் என்றில்லாமல் ஒரு AI என்னெல்லாம் செய்யும் என இந்த காலத்திற்கு ஏற்றது போல் காட்டியது அருமை. ஸ்டெண்ட் காட்சிகள், ஒவ்வொன்றும் பட்டாசு, அதிலும் கிளைமேக்ஸ் எட்ஜ் ஆப் தி சீட் தான்.
பல்ப்ஸ்
மிஷன் இம்பாசிபிள் ரசிகர்கள் இல்லாமல், நேரடியாக இந்த படம் பார்ப்பவர்களுக்கு முதல் ஒரு முக்கால் மணி நேரம் பொறுமையை சோதிக்கும்.
மொத்தத்தில் ஈதன் ஹண்ட்-ன் கடைசி மிஷன் முடிந்ததும், இனி எந்த மிஷன்-ம் இல்லையா என்ற ஏக்கத்தை பல மடங்கு அதிகரித்து உள்ளார் டாம் குரூஸ்.