ஹீரோவாகும் விஷ்ணு விஷால் தம்பி.,. ஜோடியாக இந்த பாலிவுட் ஹீரோயினா?
தமிழ் சினிமாவில் ஹீரோ ஆகும் சான்ஸ் கிடைப்பது எளிதல்ல. ஏற்கனவே சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரங்களின் குடும்பத்தில் இருந்து வரும் வாரிசுகளுக்கு முதல் வாய்ப்பு எளிதில் கிடைத்து விட்டாலும் அவர்கள் திறமையை நிரூபித்தால் தான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அந்த வரிசையில் தற்போது விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். ஓஹோ எந்தன் பேபி என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை விஷ்ணு விஷால் தான் தயாரிக்கிறார்.
பாலிவுட் ஹீரோயின்
ருத்ரா ஜோடியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் நடிக்க இருக்கிறார். மேலும் பிக் பாஸ் புகழ் நிவாஷினியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம். காமெடியனாக கருணாகரன் நடிக்கிறார்.
இன்று இந்த படத்தின் பூஜை நடந்து முடிந்திருக்கிறது. புகைப்படங்கள் இதோ..

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
