சந்திரமுகி 2 படத்தின் முதல் விமர்சனம்! எப்படி இருக்கு? முழு படத்தையும் பார்த்த பிரபலம்

By Parthiban.A Jul 24, 2023 09:30 AM GMT
Report

சந்திரமுகி 2 முழு படத்தையும் பார்த்த பிரபலத்தின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

சந்திரமுகி 2

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தினை ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோரை வைத்து எடுத்து இருக்கிறார் பி.வாசு. படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகளை படக்குழு செய்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக சந்திரமுகி 2 ரிலீஸ் ஆக இருப்பதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி 2 படத்தின் முதல் விமர்சனம்! எப்படி இருக்கு? முழு படத்தையும் பார்த்த பிரபலம் | Mm Keeravani First Review On Chandramukhi 2

முதல் விமர்சனம்  

சந்திரமுகி 2 படத்திற்கு MM கீரவாணி தான் இசையமைத்து வருகிறார். அவர் RRR படத்திற்காக ஆஸ்கார் வென்ற நிலையில் சந்திரமுகி 2 மீதும் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில் தான் சந்திரமுகி 2 முழு படத்தையும் பார்த்துவிட்டதாக கீரவாணி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

"சந்திரமுகி 2 பாத்தேன். இந்த படத்தின் கதாபாத்திரங்கள் மரணபயத்தில் பல இரவுகள் தூங்காமல் இருப்பார்கள். நான் கடந்த 2 மாதங்களாக இரவு பகலாக தூங்காமல் படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறேன்" என கீரவாணி கூறி இருக்கிறார்.  

எதிர்நீச்சல் சீரியலை பார்க்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US