மொத ராத்திரி படத்தின் இறுதி வசூல்
மொத ராத்திரி
மொத ராத்திரி இந்த வருடத்தின் ஸ்லீப்பர் ஹிட் என சொல்லலாம். அறிமுக இயக்குனர் ராஜா கருப்பையா இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா நடிப்பில் வெளிவந்த இந்த படம் முதல் வாரம் பெரிய வசூல் ஏதும் வரவில்லை.

ஆனால், படத்தின் விமர்சனம் பாசிட்டிவாக வரவர, படத்திற்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் கிடைத்தது.

இறுதி வசூல்
தற்போது இந்த படம் தமிழகம் முழுவதும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படம் ரூ 8.5 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கண்டிப்பாக இந்த படம் இந்த வருடத்தின் ஸ்லீப்பர் ஹிட் தான், மேலும் தயாரிப்பாளர்களுக்கும் இது நல்ல லாபம் கொடுத்த படமாகவே அமைந்துள்ளது.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri