அதிகரித்துள்ள ஷோக்களின் எண்ணிக்கை.. 6 நாட்களில் மொத ராத்திரி திரைப்படம் செய்துள்ள வசூல்
கடந்த வாரம் திரைக்கு வந்த மொத ராத்திரி திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மொத ராத்திரி
சிறை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிஷ்மா அனில்குமார். இதை தொடர்ந்து யூத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதன்பின், இவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்துள்ள தமிழ் திரைப்படம் மொத ராத்திரி. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரபல நடிகர் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், மொத ராத்திரி திரைப்படத்திற்கான ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் 6 நாட்களில் உலகளவில் ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
