பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் மோகன்.ஜி..
மோகன்.ஜி
திரௌபதி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பின் ருத்ர தாண்டவம் எனும் படத்தை இயக்கிவர் மோகன்.ஜி. இவர் தற்போது இணைந்து மகாசுரன் எனும் படத்தை இயக்கியுள்ளார்.
வருகிற 17ம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் நட்டி, மன்சூர் அலிகான், ராதாரவி உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய பேச்சு
இயக்குனர் மோகன்.ஜி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் பெண்கள் குறித்து இவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'பெண்கள் தங்களுடைய சமூக வலைதளத்தில் Profile புகைப்படங்களை அழகாக வைக்க வேண்டாம். அதை அப்படி வைப்பது தான் சில பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது' என்று பேசியுள்ளார். இவர் இப்படி பேசியுள்ளதை கண்டித்து நெட்டிசன்கள் பலரும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. யார் தெரியுமா

Optical illusion: கண்களை பரிசோதிக்கும் நுட்பமான படம்!இதில் இருக்கும் “80” கண்களுக்கு தெரிகிறதா? Manithan
