புதிய Range Rover கார் வாங்கிய பிரபல நடிகர் மோகன்லால்- இத்தனை கோடியா?
மோகன்லால்
மலையாள சினிமாவில் டாப் நடிகராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் கிட்டத்தட்ட 350க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் ராம் பார்ட் 1, மலைக்கோட்டை வாலிபன், ஓளவும் தீரவும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் வாங்கிய விலையுயர்ந்த பொருள் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது, விலை கேட்டும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

நடிகரின் கார்
கார்கள் மீது அதிக பிரியம் கொண்ட மோகன்லால் ரூ. 2 கோடி மதிப்பிலான டொயோட்டா லேண்ட் க்ரூஸர், ரூ.80 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்350, ரூ.1 கோடி மதிப்பிலான டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் ரூ.3 கோடி மதிப்பிலான லம்போர்கினி உருஸ் ஆகிய கார்களை பயன்படுத்தி வருகிறார்.
தற்போது ஒயிட் நிறம் கொண்ட ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார். அந்த புதிய ஒயிட் நிறம் கொண்ட ரேஞ்ச் ரோவர் காரின் விலை ரூ. 5 கோடியாம்.
அண்ணா என்ற புதிய சீரியலுக்காக மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?