அட்வான்ஸ் புக்கிங்கில் விஜய்யின் லியோ பட சாதனையை முறியடித்த மோகன்லாலில் எம்புரான்.. மாஸ் புக்கிங்
எம்புரான்
நடிகராக மட்டுமில்லாது ஒரு இயக்குனராகவும் தன்னை சிறந்தவராக காட்டி வருகிறார் பிருத்விராஜ்.
இயக்குனராக களமிறங்கி அவர் இயக்கிய 3வது படம் தான் எம்புரான். இதற்கு முன் லூசிபர், ப்ரோ டாடி ஆகிய 2 படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா படமாக உருவான எம்புரான் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக இருக்கிறது.
அதேபோல் Imaxல் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் என்ற சாதனை படைத்துள்ளது.
டிக்கெட் புக்கிங்
தொடங்கிய ஒரு மணிநேரத்தில் 96.14 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ததோடு தளபதி விஜய்யின் லியோ பட டிக்கெட் புக்கிங் சாதனையை முறியடித்துள்ளது.
இதுவரை படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 40 கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.