டாப் நடிகர் மோகன்லாலின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
மலையாள திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மோகன் லால்.
மலையத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த மோகன்லால், முதல் முறையாக ‘இருவர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதன்பின் தமிழில் வெளிவந்த ‘பாப் கார்ன், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
இது தவிர ‘சிறைச்சாலை, அரண்’ போன்ற படங்கள் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மோகன்லால் நடித்து பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த மரைக்காயர் படம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், நடிகர் மோகன் லாலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ரூ. 310 கோடிக்கு சொந்தக்காரர் நடிகை மோகன்லால் என தெரிவிக்கின்றனர்.