ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்த சூப்பர்ஸ்டார்! வேறு நடிகருக்கு சென்ற பெரிய வாய்ப்பு
இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 படம் பாதியிலேயே நின்றுவிட்டதனால் அடுத்து தெலுங்கு ஹீரோ ராம் சரணை வைத்து தற்போது ஒரு படம் இயக்கி வருகிறார் அவர்.
RC 15
இந்த படத்திற்க்கு RC15 என தற்காலிகமாக பெயர் சூட்டி இருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் புனேவில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வந்தது.
இந்த படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார்.

நடிக்க மறுத்த மோகன்லால்
முதலில் வில்லன் ரோலில் மலையாள நடிகர் மோகன்லாலை தான் அவர் நடிக்க வைக்க திட்டமிட்டு அணுகி இருக்கிறார் ஷங்கர். ஆனால் அவர் நெகடிவ் ரோலில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம்.
ஊழல் செய்யும் அரசியல்வாதி கெட்டப்பில் அவர் நடிக்க மறுத்ததால் அதன் பின் எஸ்ஜே சூர்யாவை ஷங்கர் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.
