திருமணத்திற்கு பின் பிரச்சனை, தற்கொலை எண்ணம்- நடிகை மோஹினியின் தற்போதைய நிலை
தமிழில் 1991ம் ஆண்டு ஈரமான ரோஜாவே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மோஹிணி.
அதன்பிறகு புதிய மன்னர்கள், நானா பேச நினைப்பதெல்லாம், நாடோடி பாட்டுக்காரன் போன்ற நல்ல படங்களில் எல்லாம் நடித்தார். சில தொடர்களில் மோஹிணி நடித்து வந்துள்ளார்.
1999ம் ஆண்டு பரத் என்ற ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ருத்ரகேஷ் என்ற ஒரு மகனும் உள்ளார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு மோஹினி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் பேசும்போது, திருமணத்திற்கு பின் சில நிகழ்வுகளால் நான் உடலளவிலும் மன அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டேன்.
வாழவே பிடிக்காமல் தற்கொலை எண்ணங்கள் கூட வந்து சிரமப்பட்டேன். இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட கிறிஸ்துவ மத போதனைகளும் வழிபாடுகளும் கைகொடுத்தது.
தற்போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறி மக்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் பணிகளை மனநிறைவுடன் செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.