Mollywood Times திரை விமர்சனம்
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் நஸ்லான் நடிப்பில் முகுந்தன் உன்னி அசோசியட் என்ற தரமான படத்தை கொடுத்த அபினவ் இயக்கத்தில் வெளிவந்துள்ள மாலிவுட் டைம்ஸ் படம் எப்படி பார்ப்போம்.
கதைக்களம்
நஸ்லான் சிறு வயதில் இருந்து வைக்கம் டேவிட் என்ற கிரேம் நாவல் எழுத்தாளர் எழுதிய நாவலை படித்து மிகப்பெரிய ஹாரர் ஸ்டோரி பேன் ஆக வளர்கிறார்.
சிறு வயதில் இந்த ஹாரர் ஸ்டோரி கதையை படித்து தூக்கத்தில் கீழே விழுந்து கையை உடைத்துகொள்ள, டாக்டர் அடுத்த முறை நீ வரும் போது உன் AIM சொல்ல வேண்டும் என சொல்ல, நஸ்லான் மம்மி படம் பார்த்து அதில் வரும் DTS அவருக்கு புதிய சினிமா அனுபவத்தை தருகிறது.
அதோடு மனோஜ் நைட் சாலமோன் படங்களை பார்த்து அவரை போல் ஒரு ஹாலிவுட் இயக்குனர் ஆக வேண்டும் என தன் AIM-யை வளர்த்து கொள்கிறார்.
அதை தொடர்ந்து வளர்ந்து நஸ்லான் அவர் நினைத்தது போல் ஒரு தனித்துவமான இயக்குனர் ஆனாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
நஸ்லான் தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார், படம் முழுவதும் அவரின் மைண்ட் வாய்ஸில் பல இடங்களில் காட்சிகள் நீள்வது, அதற்கு ஏற்றது போல் சீன்களும் வருவது என அனைத்திலும் தூள் கிளப்பியுள்ளார்.
படத்தின் முதல் பாதி முழுவதுமே நஸ்லான் படம் இயக்கும் போராட்டமாக சென்றாலும் அதை டார்க் காமெடி டோனில் கொண்டு சென்றது இயக்குனர் அபினவ் டச்.
அதிலும் நஸ்லான் படத்தை எடுத்துவிட்டு அதற்கு ஒரு பிரச்சனை வந்தவுடன் ரீஷுட் போலாம் என்று நினைக்கும் போது. அந்த படத்தின் ஹீரோவிற்கு நிகழும் காட்சி, எந்த இயக்குனர் என்றாலும் அழுது புரண்டு சோக வாத்தியங்களை வாசித்து ஆடியன்ஸ் கண்களை குத்தி அழ முயற்சிப்பார்கள், ஆனால், அதையும் டார்க் காமெடி டோனில் கொண்டு சென்றது வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.
அதிலும் எழுத்தாளர் வைக்கம் டேவிட் மகன் பெரிய எழுத்தாளன் ஆகவேண்டும் என நினைக்க, அங்கு ஒரு டுவிஸ்ட் வைக்க, அவருடைய மகன் சச்சின் வைக்கம் டேவிட்-யை நஸ்லான் சந்திப்பது, அங்கிருந்து நஸ்லான் வாழ்க்கை மாறுவது என இயக்குனர் டச் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.
ஆனால் இரண்டாம் பாதி சுற்றி சுற்றி ஒரே இடத்தில் படம் இருக்கிற பீல், படத்தில் பல எமோஷ்னல் காட்சிகள் இருந்தும் அடுத்த காட்சியே காமெடி வசனம், அதற்கு ஏற்ற சில நகைச்சுவை காட்சி வருவது இப்போ நம்ம சிரிக்கனுமா, பீல் பண்ணுமா என்ற குழப்பத்தை ஆடியன்ஸுக்கு தருகிறது.
டெக்னிக்கலாக படம் செம என்று தான் சொல்ல வேண்டும், முக்கியமாக கேமரா ஒர்க், எடிட்டிங் கலக்கல், பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.
க்ளாப்ஸ்
நஸ்லான் பெர்ப்பாமன்ஸ்
முதல் பாதி
டெக்னிக்கல் ஒர்க்
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி இன்னும் சுவாரஸ்யம் இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் சினிமாவை நேசிப்பவர்கள் கொண்டாடினாலும், படம் எடுப்பது எல்லோருக்கும் தானே.
2.75/5
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri