குடும்பத்தினர் கண்முன் நடிகையிடம் தவறான முறையில் நடந்துகொண்ட இயக்குநர்.. கும்பமேளாவில் வைரலான நடிகை மோனாலிசா வேதனை
மோனாலிசா
2024ஆம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானவர் மோனாலிசா. இவர் தற்போது நடிகையாக களம் இறங்கியுள்ளார் என்பதை நாம் அறிவோம். இவரை முதன் முதலில் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தெரிவித்தார்.

ஆனால், துணை நடிகை ஒருவர் தன்னிடம் அவர் தவறான முறையில் நடந்துகொண்டார் என அளித்த புகாரில் அவரை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. தனது முதல் பட இயக்குநர் சிறைக்கு சென்று விட்டார் என்பதால் மோனாலிசா திரை வாழ்க்கை என்ன ஆகும் என கேள்வி எழுந்த நிலையில், அதற்குள் அவருக்கு இன்னும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மோனாலிசா நடித்த ஆல்பம் பாடல் கூட வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்கலங்கி அழுத மோனாலிசா
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் நடிகை மோனாலிசா பேசுகையில், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை மற்றும் அத்துமீறல் குறித்து கண்கலங்கி கோபமாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "நான் முதன் முதலில் நடிக்க கமிட் ஆனது சனோஜ் மிஸ்ரா படத்தில்தான். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது சனோஜ் மிஸ்ரா என்னிடத்தில் தவறாக நடந்து கொண்டார். அவர் எனது உடல் பாகங்களை தொட்டார். அப்போது எனது குடும்பத்தினர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர். அவர்களின் கண் முன்னே அவர் அப்படி மோசமாக நடந்துகொண்டார்.

இது எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை, எப்படி ஏன் செய்கிறீர்கள் என கேட்டதற்கு, முதல் படம் என்றால் அப்படிதான் இருக்கும் என சகஜமாக பதில் கொடுத்தார். முதல் படம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? முதல் படம் என்றால் தவறான முறையில் நடப்பீர்கள?" என கோபமாக கண்கலங்கி அழுது கொண்டே பேசினார். நடிகை மோனாலிசா இவ்வாறு பேசியது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.