அஜித் பெயரை பயன்படுத்தி மோசடி! லட்ச ரூபாய்க்கு மேல் ஏமாந்த அஜித் ரசிகர்
அஜித் ரசிகர்
நடிகர் அஜித்துக்கு தமிழ்நாட்டில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரது படங்களை திருவிழா போல அவர்கள் கொண்டாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அஜித் ரசிகர் மன்றத்தை களைத்தாலும் ரசிகர் கூட்டம் அப்படியே தான் இருக்கிறது.
இந்நிலையில் ரசிகர் ஒருவரிடம் அஜித் பெயரை பயன்படுத்தி ஒரு மோசடி நடந்திருக்கும் சம்பவம் தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

மோசடி
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வசித்து வரும் ஐயப்பன் என்ற கூலி தொழிலாளி தீவிர அஜித் ரசிகராக இருந்து வந்திருக்கிறார்.
அவருக்கு சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ஏழையாக இருக்கும் ரசிகர்களை தேர்வு செய்து 15 லட்சம் ருபாய் கொடுத்து வீடு கட்ட உதவுகிறார் என சிவா சொன்னதை ஐயப்பன் அப்படியே நம்பி இருக்கிறார்.
பத்திரப்பதிவுக்கு ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் என சொல்லி அவரிடம் சிவா அதன் பின் பணம் வாங்கி மோசடி செய்திருக்கிறார்.
இதுபற்றி ஐயப்பனின் மனைவி தற்போது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து இருக்கிறார். அஜித் பெயரை பயன்படுத்தி நடந்திருக்கும் மோசடி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த படத்தை தான் காபி அடிக்கிறாரா பாரதி கண்ணம்மா இயக்குனர்! மோசமான ட்ரோல்