படம் ரிவியூ செய்ய 3 லட்சம் கேட்டேனா.. பார்த்திபனுக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி
விமர்சகர் மற்றும் திரைப்பட இயக்குனரான ப்ளூ சட்டை மாறன் கடந்த ஒரு வாரமாக பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை பற்றி விமர்சித்து வருகிறார்.
அது தான் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என பார்த்திபன் விளம்பரப்படுத்தி வரும் நிலையில், ஏற்கனவே ஒரு ஈரானிய படம் தான் அந்த பெருமையை பெற்றுவிட்டது என கூறி வருகிறார்.
இது தொடர்பாக இரண்டு தரப்புக்கும் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்க, பார்த்திபன் ரசிகர்கள் ப்ளூ சட்டையின் கொடும்பாவியை எரித்தனர்.
அதற்கு விளக்கம் கொடுத்த பார்த்திபன், 'கொடும்பாவி எரித்தது என் ரசிகர்கள் இல்லை. இதற்க்கு முன் ஒரு படம் எடுத்த தயாரிப்பாளர், ப்ளூ சட்டையிடம் தன் படத்தை விமர்சிக்க கேட்க அதற்கு 3 லட்சம் ருபாய் தர வேண்டும் என கேட்டதாகவும், அந்த கோபத்தில் தான் தற்போது கொடும்பாவி எரித்து இருக்கிறார்" என்று பார்த்திபன் கூறி இருக்கிறார்.

இதற்கு தற்போது ப்ளூ சட்டை பதிலடி கொடுத்து தேஜாவு பட விமர்சன வீடியோவில் பேசி இருக்கிறார். "நான் ஆதாரத்துடன் இரவின் நிழல் உலகத்தின் முதல் non linear சிங்கள் ஷாட் படம் இல்லை என கூறினேன். ஆனால் இவர் அதற்க்கு பதில் சொல்லாமல், இப்படி எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டை என் மீது வைத்துவிட்டு போகிறார்."
"அந்த தயாரிப்பாளர் யார், என்ன படம், என்ன பேசினார், நான் என்ன பதில் சொன்னேன்.. என எந்த விவரமும் இல்லாமல், ஆதாரமும் இல்லாமல் இப்படி போகிற போக்கில் ஒரு விஷயத்தை கூறுகிறார்."
"கொடும்பாவி எரித்ததற்கு என் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்பதாக பார்த்திபன் சொல்கிறார். நீங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம். நீங்கள் ஏமாற்றிய 12 கோடி தமிழர்களிடம் முதலில் மன்னிப்பு கேளுங்கள்" என ப்ளூ சட்டை தெரிவித்து இருக்கிறார்.