லோகேஷ் கனகராஜ் பெயரில் பண மோசடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறியுள்ளார்.
இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்ததாக திரைக்கு இந்நிலையில் திரைத்துறையில் இருக்கும் இளம் நடிகர் நடிகைகளிடம் மோசடி நடப்பதாக கூறி ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
பண மோசடி
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மானேஜர் என சொல்லிக்கொண்டு ஒருவர் இளம் நடிகர் நடிகைகளுக்கு பேசியிருக்கிறார்.
பெண் போட்டியாளரை பார்த்து ஒன்றாக படுக்கலாமா என கேட்ட பிரதீப், முகம் சுழிக்கும் செயல்- கோபத்தில் ரசிகர்கள், வீடியோ
லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்துக்கு உங்களை நடிக்க வைக்கிறோம் என்றும், பணம் அனுப்பினால் ஆடிஷனுக்கு வரும்போது அணிய தேவையான ஆடைகளை வாடகைக்கு தருகிறோம் என்றும் பேசி பணம் வசூல் செய்கிறாராம்.
சினிமா துறைக்கு வரவேண்டும் என்ற கனவில் இருக்கும் இளம் நடிகர் நடிகைகளிடம் இந்த மோசடி நடக்கிறது. இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.