சிவாஜி கணேசனின் பேரன் மீது பணமோசடி வழக்கு.. முழு விவரம் இதோ
நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் மற்றும் நடிகரான துஷ்யந்த், ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் உள்ளார்.
இவரும் ஈசன் புரொடக்சன்ஸ் சேர்ந்து ஜகஜால கில்லாடி படத்தை தயாரிக்க தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.4 கோடி கடன் வாங்கியுள்ளனர்.
இவர்கள் கடன் வாங்குவதற்கு முன்பு அந்த நிறுவனத்துடன் சில ஒப்பந்தங்கள் போட்டுள்ளனர். அது என்னவென்றால் 30 சதவீத வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த வேண்டும். மேலும் திரைப்படத்தின் உரிமைகளையும் தர வேண்டும், அதுமட்டும் இல்லாமல் படத்தை 2018 -ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டதாம்.
பணமோசடி
இந்நிலையில் ஒப்பந்தப்படி வட்டியுடன் கடனை திருப்பி தரவில்லை என்று எண்டர்பிரைசஸ் நிறுவனம் துஷ்யந்த் மீது உயர் நீதி மன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம் துஷ்யந்த் மற்றும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் வரும் 23 தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஹோட்டல்ல மீட் பண்ண கூப்பிட்டார்.. அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஆவேசமாக பேசிய வரலட்சுமி

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
