மோனிகா பாடலை பார்த்து ரசித்த ஹாலிவுட் நடிகை மோனிகா பெல்லுச்சி.. அட இது எப்போ
மோனிகா பெல்லுச்சி
உலக புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் மோனிகா பெல்லுச்சி. இவர் Malèna, Irréversible, Matrix Reloaded, Shoot 'Em Up உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் இவருக்கு தற்போது 60 வயது ஆகிறது.
நடிகை மோனிகா பெல்லுச்சிக்கு Tribute பண்ணும் விதமாக கூலி திரைப்படத்தில் மோனிகா என்கிற பாடலை அனிருத், லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருந்தனர். நடிகை பூஜா ஹெக்டே இப்பாடலில் நடனமாட இருந்தார்.
இந்த பாடல் உலகளவில் படுவைரலானது. ரசிகர்கள் பலரும் நடிகை மோனிகா பெல்லுச்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோனிகா பாடல் குறித்து கமன்ட் செய்து வந்தனர்.
பாடலை ரசித்த மோனிகா பெல்லுச்சி
இந்நிலையில், மோனிகா பாடலை நடிகை மோனிகா பெல்லுச்சி சமீபத்தில் பார்த்துள்ளாராம். பாடலை பார்த்துவிட்டு ரசித்ததாகவும், அவருக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் கூறினாராம். இந்த தகவல் சமீபத்தில் பூஜா ஹெக்டேவை பேட்டி எடுத்த தொகுப்பாளினி கூறியிருந்தார். இதை கேட்ட பூஜா ஹெக்டேவிற்கு இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது.

தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பணும்; தனியாருக்கு போனாலும் சலுகை உண்டு - சென்னை மாநகராட்சி IBC Tamilnadu
