நான் இறந்ததாக காட்டியது இதனால்தான்- கனா காணும் காலங்கள் சீரியல் ரகசியம் குறித்து சொன்ன சங்கவி
90களின் காலம் மிகவும் பொன்னான காலம் என்றே கூறலாம். அப்போது சின்ன குழந்தை முதல் பெரியவர்களுக்கு அனுபவித்தது இப்போது உள்ள 20களில் இருப்பவர்களுக்கு இல்லை.
நாம் சமூக வலைதளங்களில் கூட பலர் 90களின் காலம் தான் பொன்னான காலம் என சில விஷயங்கள் பற்றி பேசுவதை பார்த்திருப்போம். அப்படி தொலைக்காட்சியில் 90களில் இருந்தவர்கள் ரசித்த ஒரு சூப்பரான சீரியல் என்றால் அது கனா காணும் காலங்கள்.
இந்த சீரியலில் நடித்தவர்களின் ரீயூனியன் நிகழ்ச்சி அண்மையில் விஜய்யில் ஒளிபரப்பானது, இதில் பலர் வரவில்லை. நிகழ்ச்சியில் வராதது குறித்து முதன்முறையாக பேசியுள்ளார் முதல் தொடரில் நடிக்க சங்கவி என்ற மோனிஷா.
அதில் அவர், வருடத்திற்கு இரண்டு முறை சென்னை வருவேன், கடந்த பிப்ரவரி மாதம் தான் வந்தேன், உடனே வர என்னால் முடியவில்லை. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆசையாக தான் இருந்தது.
சீரியல் குறித்து பேசிய அவர், கனா காணும் காலங்கள் தொடர் நடுவில் எனக்கு மெடிக்கல் வகுப்புகள் ஆரம்பித்துவிட்டார்கள். என்னால் இரண்டையும் செய்ய முடியாது, எனவே தான் எனது வேடம் இறந்துவிட்டது போல் காட்டினார்கள்.
நான் இறந்த எபிசோடு வந்த சில நாட்களில் ரசிகர்கள் என் வீடு தேடி வந்துவிட்டார்கள், அவர்களை சந்தித்து பேசிய பிறகே சென்றார்கள் என கூறியுள்ளார்.