ஊட்டியில் நடிகையிடம் குரங்கு செய்த அட்டகாசம்! மருத்துவமனையில் நடிகை
ஊட்டி
பிரபல ஹிந்தி சீரியல் நடிகை Sumbul Touqeer சமீபத்தில் அவரது நெருங்கிய தோழியான நடிகை உல்கா குப்தா உடன் ஊட்டிக்கு வந்திருக்கிறார்.
ஹிந்தியில் Chandragupta Maurya, Ishaaron Ishaaron Mein, Waaris போன்ற சீரியல்களில் நடித்து இருக்கும் அவர் ஆர்டிகள் 15 படத்திலும் நடித்து இருந்தார்.
கடந்த சில தினங்களாக ஊட்டியில் சுற்றுலாவில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
நடிகையை கடித்த குரங்கு
இந்நிலையில் இன்று நடிகை Sumbul Touqeer-யிடம் ஊட்டியில் குரங்கு ஒன்று அட்டகாசம் செய்து இருக்கிறது. அவரை குரங்கு கடிதத்தில் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று இருக்கிறார்.
தன்னை கடித்த குரங்கின் போட்டோவை அவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.


