பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி!! மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் 10 நாட்கள் வசூல் விவரம்
10 days mookuthi amman 2 Box office: நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய நிலையில், பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், 10 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.
மூக்குத்தி அம்மன் 2
தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் திரைப்படங்கள் வெளியாகிறது என்றாலே சற்று பதற்றம் இருக்கும். காரணம் பல இரண்டாம் பாக திரைப்படங்கள் தோல்வியை சந்திருக்கிறது. இந்த வருடம் கூட கார்த்தியின் சர்தார் 2 தோல்வியடைந்தது. ஆனால், மறுபக்கம் மீசைய முறுக்கு 2, ஜெயிலர் 2, கட்டா குஸ்தி 2 போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இந்த ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான வசூல் சரிவை சந்தித்து வருகிறது.
10 நாட்கள் வசூல்
இப்படி இருக்க, 10 நாட்களில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 32+ கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் மூலம் ரூ. 16 கோடி ஷேர் இதுவரை வந்துள்ளது. ஆனால், படத்தின் பட்ஜெட் ரூ. 100+ கோடி ஆகும். குறைந்தபட்சம் 50% சதவீதமாவது ஷேர் கிடைத்திருக்க வேண்டும்; ஆனால் இதுவரை ரூ. 16 கோடி மட்டுமே ஷேர் செய்திருப்பது என்பது மிகப்பெரிய தோல்வியாகும்.

இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு இருந்தாலும், ராமாயணா, சீன் ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், வருகிற 20-ஆம் தேதி முதல் ஓம், காட்சில்லா, AOT, அப்பாக்குட்டி போன்ற எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களும் வெளியாகிறது. இதனால், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் மூச்சுவிட கூட இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.