மூக்குத்தி அம்மன் 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?

Report

Mookuthi Amman 2 first review: மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் நிலையில், இப்படத்தை பார்த்த Executive தயாரிப்பாளர் தனது X பக்கத்தில் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, படம் எப்படி இருக்கு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

அய்யனார் துணை சீரியல்: நிலாவிற்காக சோழன் வாங்கிய தங்க வளையல்.. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்..

அய்யனார் துணை சீரியல்: நிலாவிற்காக சோழன் வாங்கிய தங்க வளையல்.. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்..

மூக்குத்தி அம்மன் 2

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் சுந்தர் சி கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் உருவாகி இருப்பதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், முதல் பாகத்தின் கதைக்கும் இப்படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என படக்குழுவினர் சமீபத்தில் நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கூறியிருந்தனர்.

மூக்குத்தி அம்மன் 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு? | Mookuthi Amman 2 First Review

இப்படத்தில் ரெஜினா வில்லியாக நடித்துள்ளார். டிரைலர் வெளியானதில் இருந்து இவருடைய கதாபத்திரத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் ஊர்வசி, சினேகா, குஷ்பூ, யோகி பாபு, துனியா விஜய், மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார். வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக மூக்குத்தி அம்மன் 2 வெளியாகிறது.

மூக்குத்தி அம்மன் 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு? | Mookuthi Amman 2 First Review

முதல் விமர்சனம்

இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை பார்த்த பிரபல Executive தயாரிப்பாளர் தனது X பக்கத்தில் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இந்த பதிவில், #Mookuthiamman என்று குறிப்பிட்டு, அதன்பின் முழுமையாக Fire எமோஜிகளை பதிவிட்டுள்ளார். இதன்மூலம் படம் சிறப்பாக வந்துள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இவருடைய பதிவின்படி படம் அமைந்தால் இந்த தீபாவளி மூக்குத்தி அம்மன் 2 தீபாவளியாக கூட மாற வாய்ப்புள்ளது.

மூக்குத்தி அம்மன் 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு? | Mookuthi Amman 2 First Review

மேலும், இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்து வெளியான கட்டா குஸ்தி 2, மீசைய முறுக்கு 2 மற்றும் ஜெயிலர் 2 என அனைத்து இரண்டாம் பாக திரைப்படங்களும் மாபெரும் வெற்றிபெற்றன. அந்த வரிசையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படமும் இணையுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US