பாக்ஸ் ஆபிஸ்: மூக்குத்தி அம்மன் 2 இரண்டு நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
Mookuthi amman 2 movie 2 days box office: நயன்தாராவின் நடிப்பில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி கடந்த 6-ஆம் தேதி வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் 2 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
மூக்குத்தி அம்மன் 2
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகை நயன்தாரா - இயக்குநர் சுந்தர் சி கூட்டணியில் முதல் முறையாக உருவாகி வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தில் ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி, யோகி பாபு, இனியா என பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த தீபாவளிக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் சற்று தடுமாறி வருகிறது.

2 நாள் வசூல் விவரம்
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் முதல் நாள் உலகளவில் ரூ. 4 - 5 கோடி வரை வசூல் செய்தது. இதை தொடர்ந்து இரண்டு நாட்கள் முடிவில் உலகளவில் மொத்தமாக ரூ. 7 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள சுமாரான ஓப்பனிங் வார வசூலாகும். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுப்பு துறப்பு: மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து இந்த பதிவில் உள்ள விவரம் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.