பாக்ஸ் ஆபிஸ்: மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் 4 நாட்களில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 10, 2026 06:23 AM GMT
Report

Mookuthi Amman 2 Movie Box office: நயன்தாராவின் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட கடந்த வாரம் திரைக்கு வந்த மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நான்கு நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

மூக்குத்தி அம்மன் 2

இயக்குநர் சுந்தர் சி தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். அதிலும் நகைச்சுவையில் இவருடைய திரைக்கதையை மிஞ்சே ஆளே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன் 2.

பாக்ஸ் ஆபிஸ்: மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் 4 நாட்களில் செய்துள்ள வசூல் | Mookuthi Amman 2 Movie 4 Days Box Office

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ரெஜினா, ஊர்வசி, துனியா விஜய், சினேகா, குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் வில்லியாக களமிறங்கிய ரெஜினா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை அல்லி வருகிறார். ஆனால், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை இப்படம் சந்தித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் 4 நாட்களில் செய்துள்ள வசூல் | Mookuthi Amman 2 Movie 4 Days Box Office

4 நாட்கள் வசூல் விவரம்

கடந்த வாரம் திரைக்கு வந்த மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 4 நாட்களை கடந்துள்ளது. இந்த நிலையில், 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 17+ கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள குறைவான வசூலாகும். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் 4 நாட்களில் செய்துள்ள வசூல் | Mookuthi Amman 2 Movie 4 Days Box Office

பொறுப்பு துறப்பு: மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US