பாக்ஸ் ஆபிஸ்: மெதுவாக வசூல் வேட்டை செய்யும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2...
மூக்குத்தி அம்மன் 2
Mookuthi Amman 2 Box Office: சாமி படங்கள் என்றாலே தமிழ் மக்கள் மிகவும் ஆர்வமாக பார்ப்பார்கள்.
பொதுவாக சாமி படங்கள் என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகம் வருவது ரம்யா கிருஷ்ணன் பயங்கரமாக அம்மனாக நடித்த அம்மன் திரைப்படம் தான். அதன்பிறகு நிறைய படங்கள் வந்தாலும் சாமி படம் என்றாலே முதலில் ரசிகர்கள் அம்மன் படத்தை தான் கூறுவார்கள்.

அப்படி சாமியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களின் லிஸ்டில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் இடம்பெற்றுள்ளது.
புதிய படம்
கடந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியான புதிய படங்களில் ஒன்று தான் மூக்குத்தி அம்மன் 2.

ஆர்.ஜே.பாலாஜி இயக்க நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் முதல் பாகம் மாஸ் வெற்றியடைய இரண்டாம் பாகம் தயாராகி கடந்த நவம்பர் 6ம் தேதி வெளியானது.
சுந்தர்.சி இயக்க நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பல கலைஞர்கள் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
ராமாயணா, சீன் என இரண்டு பிரம்மாண்ட படங்களுடன் வெளியான மூக்குத்தி அம்மன் 2 மெதுவாக வசூல் வேட்டை நடத்துகிறது. படம் வெளியாகி 7 நாள் முடிவில் இதுவரை படம் ரூ. 29 கோடி வரை மட்டுமே மொத்தமாக வசூல் செய்துள்ளதாம்.
