பாக்ஸ் ஆபிஸ்: நயன்தாரா படத்திற்கு இப்படியொரு நிலைமையா? 9 நாட்களில் மூக்குத்தி அம்மன் 2 செய்துள்ள வசூல்
Mookuthi amman 2 movie 9 days box office: நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மூக்குத்தி அம்மன் 2
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகை நயன்தாரா - இயக்குநர் சுந்தர் சி கூட்டணியில் முதல் முறையாக உருவாகி வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தில் ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி, யோகி பாபு, இனியா என பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த தீபாவளிக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் சற்று தடுமாறி வருகிறது.
உலகளவில் செய்துள்ள வசூல்
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் வசூல் விவரங்களை முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில், 9 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் ரூ. 31 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது நயன்தாராவின் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை தந்துள்ளது. லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் இவருடைய படத்திற்கே பாக்ஸ் ஆபிஸில் இந்த நிலைமையா என வருத்தத்தில் உள்ளனர்.

பொறுப்பு துறப்பு: மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.