பாக்ஸ் ஆபிஸ்: மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
Mookuthi amman 2 movie final box office: நயன்தாரா அம்மனாக நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சமீபத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளிலிருந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
மூக்குத்தி அம்மன் 2
தென்னிந்திய சினிமாவையும் தாண்டி இன்று பான்-இந்தியன் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார். ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சல்மான் கானுடன் இணைந்து மான்ஸ்டர் என்கிற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2.

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி, சினேகா, குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இறுதி வசூல்
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்து வருகிறது, இதுவரை செய்த வசூல் , அதன்மூலம் கிடைத்துள்ள ஷேர் உள்ளிட்ட விஷயங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். மேலும், இப்படம் மாபெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 100+ கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இறுதியாக பாக்ஸ் ஆபிசில் ரூ. 36+ கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்மூலம் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.

பொறுப்பு துறப்பு: மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.