100 கோடி பட்ஜெட்..! பிரம்மாண்டமாக பூஜையுடன் துவங்கிய மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு..
மூக்குத்தி அம்மன் 2
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குகிறார்.
நயன்தாரா இப்படத்தில் அம்மனாக நடிக்கிறார். மேலும் ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் ரெஜினா, அபிநயா, இனியா, யோகி பாபு, துனியா விஜய், கருடா ராம், சிங்கம் புலி ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
ஆம், இவர்கள் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தின் பூஜையில் ரவி மோகன், குஷ்பூ, மீனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. முதல் ஷாட் நடிகை நயன்தாரா அம்மனை வாங்கும் காட்சியாக எடுக்கப்பட்டுள்ளது.