அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மூக்குத்தி அம்மன் 2 ரிலீஸ் எப்போது?

By Karthick Raja Sep 09, 2026 04:09 AM GMT
Report

வெளியான தகவல் 2020-ல் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில், அப்படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்

மூக்குத்தி அம்மன்

இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி, கடந்த 2020-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியானது மூக்குத்தி அம்மன். இப்படத்தை வேல்ஸ் நிறுவனத்தின் மூலம் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருந்தார். மக்களிடையே பேராதரவு பெற்று இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மூக்குத்தி அம்மன் 2 ரிலீஸ் எப்போது? | Mookuthi Amman 2 Release Update

மூக்குத்தி அம்மன் 2

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஆண்டு மூக்குத்தி அம்மன் 2 அறிவிப்பு வெளியானது. வேல்ஸ் நிறுவனம் மற்றும் நயன்தாரா & விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஆர்.ஜே. பாலாஜிக்கு பதிலாக இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குகிறார்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மூக்குத்தி அம்மன் 2 ரிலீஸ் எப்போது? | Mookuthi Amman 2 Release Update

இப்படத்தில் ரெஜினா, சினேகா, குஷ்பூ, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள். மேலும், ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார். மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காத்திருக்கும் நயன்

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருப்பது போலவே, நடிகை நயன்தாராவும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். காரணம், இப்படத்தில் பிரம்மாண்டம், உணர்ச்சிபூர்வமான விஷயங்கள், நகைச்சுவை என பல அம்சங்கள் ரசிகர்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தும் என்றும், மேலும் தனது திரை வாழ்க்கையில் இப்படம் மிகப்பெரிய திருப்பத்தை உண்டாக்கும் என்பதால் ஆவலுடன் காத்திருப்பதாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மூக்குத்தி அம்மன் 2 ரிலீஸ் எப்போது? | Mookuthi Amman 2 Release Update

5 நாட்களில் உலகளவில் 'இம்மார்ட்டல்' திரைப்படம் செய்துள்ள வசூல்

5 நாட்களில் உலகளவில் 'இம்மார்ட்டல்' திரைப்படம் செய்துள்ள வசூல்

ரிலீஸ் எப்போது

இந்நிலையில், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு டாக்சிக் மற்றும் ஹாய் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படமும் வெளிவந்தால் கண்டிப்பாக அது ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மூக்குத்தி அம்மன் 2 ரிலீஸ் எப்போது? | Mookuthi Amman 2 Release Update

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US