பாக்ஸ் ஆபிஸ்: மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் 3 நாட்களில் செய்துள்ள வசூல்
Mookuthi amman 2 worldwide 3 days Box office: மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வெளியாகி 3 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
மூக்குத்தி அம்மன் 2
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இயக்குநராக பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் சுந்தர் சி. கடந்த ஆண்டு அரண்மனை 4 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை கையில் எடுத்தார். முதல் முறையாக நடிகை நயன்தாராவுடன் இப்படத்தில் கைகோர்த்தார். வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஊர்வசி, ரெஜினா, துனியா விஜய், யோகி பாபு, குஷ்பூ, சினேகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா
மூக்குத்தி அம்மன் முதல் பாகம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக திருப்திப்படுத்தியது. இதனால் அப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்த வெற்றியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு தற்போது வெளியானது. ஆனால், முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் இப்படத்தை எடுத்துள்ளனர். இருப்பினும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் சறுக்கலை சந்தித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்
மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 3 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் உலகளவில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் ரூ. 10+ கோடி வசூல் செய்துள்ளது. முதல் வாரத்தின் இறுதியில் இப்படத்திற்கு கிடைத்துள்ள வசூல் என்பது மிகவும் குறைவானதாகும். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுப்பு துறப்பு: மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
மஸ்க், மில்லர் மற்றும் அமெரிக்க பெருநிறுவனங்கள் மீது விசாரணை... ஜனநாயகக் கட்சியினர் திட்டம் News Lankasri