CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக்
Cm விஜய்
சினிமாவில் இருந்த விஜய் பற்றி இந்திய சினிமா எவ்வளவோ பேசியுள்ளது, கொண்டாடியுள்ளது. ஆனால் அதையெல்லாம் எப்போதும் தலையில் வைத்துக்கொள்ளாமல் சாதாரணமாக காணப்படுவார்.
பீக்கில் இருக்கும் தனது சினிமா கேரியரை நிறுத்திவிட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சில வருடங்களுக்கு முன்பு அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார், அதற்கான வேலைகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விஜய் தனியாக போட்டியிட்டு யாரும் எதிர்ப்பார்க்காத அளவு வரலாற்று சாதனை படைத்தார். இப்போது தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்று நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்.

சீரியல் நடிகர்
சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது மூன்று முடிச்சு. இப்போது சீரியலில் பரபரப்பான திருமண எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்று வருபவர் தான் நியாஸ். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய்யின் அரசியல் பற்றியும், முக்கியமான ஒரு விஷயம் குறித்தும் பேசியுள்ளார்.

மக்கள் முடிவு தான் மகேசன் முடிவு தான், மகேசன் முடிவு கூட இல்லை மக்கள் முடிவு.
அவர்கள் எடுத்து நெஞ்சில் வைத்துவிட்டால் எவன் நினைத்தாலும் வெளியே அனுப்ப முடியாது. அரசியல் என்பது சேவை, அதற்கு எதற்கு அனுபவம் வேண்டும். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும்.

இந்த மாநிலத்தை Run பண்ணுவது யார், CM டாப்பில் இருப்பவர், லீடர். நிர்வாகம் செய்வது IAS அதிகாரிகள் தானே, நிர்வாகத்தை பற்றி அவர்களுக்கு தெரியும். எது வேண்டும், எது வேண்டாம் என்பதை CM முடிவு எடுப்பார்.
அதற்கு எதற்கு அனுபவம் வேண்டும், பெரிய அனுபவம் பெற்றவர்கள் என்ன செய்துள்ளார்கள் என பேசியுள்ளார்.