கோலாகலமாக கொண்டாடப்பட்ட மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் பிறந்தநாள்... புகைப்படங்கள் இதோ
மூன்று முடிச்சு
கடந்த 2024ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் மூன்று முடிச்சு. சூர்யா-சுந்தரவல்லி என்ற அம்மா-மகனின் கதையாக முதலில் தொடங்கப்பட்டது.
பின் அப்படியே கதை செல்ல செல்ல சூர்யா-நந்தினி ஜோடியின் கதையாக மாற தொடங்கியது. இப்போது கதையில் சுரேக்கா ரஞ்சித் சூழ்ச்சியால் கடத்தப்பட அந்த பழி முழுவதும் நந்தினி மேல் விழ இருக்கிறது.
இது பத்தாது என்று நந்தினி தங்கையால் அவருக்கு பிரச்சனை ஏற்பட இருக்கிறது. கதையில் ஒவ்வொரு நாளும் கதைக்களம் பரபரப்பின் உச்சமாகவே சென்றுகொண்டிருக்கிறது, எப்போது பெரியதாக சுரேக்காக கடத்தல் பிரச்சனை வெடிக்கும் என தெரியவில்லை.

கொண்டாட்டம்
இந்த தொடரில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்று வருகிறார் நடிகர் நியாஸ் கான். பாசத்திற்கு பாசம், அடிதடிக்கு அடிதடி, அதிரடிக்கு அதிரடி, அதாவது அவரிடம் என்ன காட்டுகிறார்களோ, அதை அவர் திரும்பி கொடுப்பார்.

அவரின் இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சூர்யாவாக நடிக்கும் நியாஸ் கானின் பிறந்தநாளை சீரியல் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர், அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இதோ போட்டோ,